ஐந்தாவது முறையாகவும் உலக கிண்ணத் தொடரில் விளையாடவுள்ள மஹேல ஜெயவர்தன, அப்ரிடி!!

837

mahela_afridi

உலக கிண்ண போட்டித் தொடர் ஒன்றில் ஐந்தாவது முறையாகவும் மஹேல ஜயவர்த்தன, சயிட் அப்ரிடி போன்ற அனுபவமிக்க வீரர்கள் விளையாடுவதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

2015ம் ஆண்டுக்கான உலக கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் பெப்ரவரி 14ம் திகதி தொடக்கம் மார்ச் 29ம் திகதி வரை, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடைபெறவுள்ளது.

இந்த உலக கிண்ணத்தில் விளையாடும் மிகுந்த அனுபவம் வாய்ந்த வீரர்கள் ஜயவர்த்தன, அப்ரிடி. இருவரும் ஐந்தாவது முறையாகவும் விளையாடுவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி) தெரிவித்து உள்ளது.



இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் ஜயவர்த்தனவும், பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் அப்ரிடியும் இந்த உலக கோப்பைக்கான 30 பேர் கொண்ட அணியில் இடம் பெற்றுள்ளனர். இருவரும் 15 பேர் கொண்ட அணியிலும் இடம்பெறுவார்கள்.

இதன்மூலம் அவர்கள் ஐந்தாவது உலக கிண்ணத்தில் விளையாடும் பெருமையை பெறுவார்கள்.

1999ம் ஆண்டு உலக கிண்ணத்திலிருந்து அவர்கள் தொடர்ந்து(2003, 2007, 2011) விளையாடி வருகிறார்கள். இதில் ஒருமுறை கூட இருவரும் தங்கள் அணிக்காக கிண்ணத்தை பெற்றுக் கொடுக்கவில்லை. இந்த முறை இருவரும் உலக கிண்ணத்தை பெற்றுக் கொடுக்கும் ஆர்வத்தில் உள்ளார்.

பாகிஸ்தானை சேர்ந்த ஜாவிட் மியான்டட், டெண்டுல்கர் ஆகியோர் தான் அதிகபட்சமாக 6 உலக கிண்ணத்தில் விளையாடி உள்ளனர். மியான்டட் 1975, 1979, 1983, 1987, 1992, 1996 ஆகிய உலக கிண்ணத்திலும், டெண்டுல்கர் 1992, 1996, 1999, 2003, 2007, 2011, ஆகிய உலக கிண்ணத்திலும் விளையாடி உள்ளார்.

இதில் 1992ல் பாகிஸ்தானும், 2011ல் இந்தியாவும் உலக கிண்ணத்தை வென்று இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.