தம்புள்ளையில் இடம்பெற்ற விபத்தில் வவுனியா நபர் பரிதாப மரணம்!!

907

10859384_925643594122279_840316896_n

கடந்த வெள்ளிக்கிழமை (12.12.2014) தம்புள்ளை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வவுனியா பூந்தோட்டம்- பெரியார்குளத்தைச் சேர்ந்த சந்திரன் பாஸ்கரன் (ரெக்சி) என்ற 42 வயது நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தனது வாகனத்தில் மரக்கறிகளை ஏற்றி வரும்போது தம்புள்ளை பகுதியில் வைத்து இராணுவ வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. நெஞ்சு மற்றும் தலைப் பகுதியில் பலத்த காயங்களுக்குள்ளான இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார்.