வாழ்நாளை அதிகரிக்கும் உணவுகள்!!

447

blood_food

தினமும் நாம் உண்ணும் உணவுகளை பொறுத்தே நோய்கள் நம்மை அண்டாமல் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம். முறையான உணவுப் பழக்கங்களின் மூலமும், உடற்பயிற்சியின் மூலமும் சிறப்பாக வாழ்க்கை நடத்தலாம். இந்த உணவுகளை அடிக்கடி சமைத்து சாப்பிடுவதன் மூலம் நோய்களை அடித்து விரட்டலாம்.

பசலைக் கீரை

பசலைக் கீரையில் அதிகளவு அன்டி ஒக்சிடன்டுகள், இரும்பு மற்றும் விட்டமின் சத்துக்கள் அடங்கியுள்ளன. கண்களுக்கு மிகச் சிறந்த உணவான பசலைக் கீரை, இரத்த அழுத்தத்தை சீராக வைப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.

கிரீன் டீ

தினமும் ஒரு டம்ளர் க்ரீன் டீ குடித்து வருவது உடலுக்கு நன்மை பயக்கும்.
இதில் அதிகளவு அன்டி ஒக்சிடன்டுகள், விட்டமின் சி மற்றும் இ சத்துக்கள் அடங்கியுள்ளன.

உடல் எடையை குறைப்பதற்கு உதவும் கிரீன் டீ, இதயம் மற்றும் புற்றுநோயிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.
ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைப்பதுடன், உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது.

மீன்கள்

மீனில் நிறைந்துள்ள புரதங்கள் மற்றும் ஒமேகா- 3 அமிலங்கள் நோய்களில் இருந்து பாதுகாத்து ஆரோக்கியமான இதயத்திற்கு உத்தரவாதம் அளிக்கின்றன. சால்மன், நெத்தலி மற்றும் மத்தி மீன்கள் ஏராளமான நன்மைகளை அளிப்பதுடன், நினைவிழப்பு மற்றும் கீல் வாதத்திலிருந்து பாதுகாக்கிறது.

பெர்ரி

பெர்ரி பழங்களில் நிறைந்துள்ள அன்டி ஒக்சிடன்டுகள் நோய்களை விரட்டியடித்து உடலை பாதுகாக்கிறது. ப்ளூ பெர்ரி பழங்கள் உடலில் கொழுப்பை கரைப்பதுடன், இதய நோய்கள் வராமலும் தடுக்கிறது. மேலும் ஸ்ட்ராபெர்ரி பழங்களில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் நீரிழிவு மற்றும் புற்றுநோய்களில் இருந்து விடுதலை அளிக்கிறது.

தேங்காய்

சமையலறையை அலங்கரிக்கும் பொருளான தேங்காயில் எண்ணற்ற பலன்கள் அடங்கியுள்ளன. தேங்காய்ப் பாலில் உள்ள மாங்கனீஸ் சத்துக்கள் நீரிழிவு நோயிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் இதில் உள்ள பொஸ்பரஸ் எலும்புகளை உறுதியாக்குகிறது.

டார்க் சொக்லேட்

இதில் உள்ள அன்டி ஒக்சிடன்டுகள் முதுமையை தடுப்பதுடன், இதயம் மற்றும் மூளைக்கு சிறந்தது. மேலும் இரத்தத்தில் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கிறது. இவற்றை சாப்பிடுவதால் மூளை சுறுசுறுப்பாக செயல்படுவதுடன், மறதிநோய் வராமல் தடுக்கிறது.

தயிர்

தயிர் நமது உடலுக்கு சிறந்த அருமருந்து என்றே சொல்லலாம், இதில் முக்கியமான விட்டமின்கள் மற்றும் புரதச் சத்துக்கள் அடங்கியுள்ளன. இதில் உள்ள கல்சியம், புரோட்டீன் சத்துக்கள் எலும்புகளை வலுவாக்குகிறது. மேலும் இரத்த அழுத்தத்தை சீராக வைப்பதுடன், ஆரோக்கியமான இதயத்திற்கு வழிவகுக்கிறது.