க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதிய 70 வயது முதியவர்!!

567

exam

எழுபது வயதான முதியவர் ஒருவர் நேற்று கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் கணிதப்பாட பரீட்சையில் தோற்றியுள்ளார்.

பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த நிமல் சில்வா எனப்படுகின்ற குறித்த பரீட்சார்த்தியே இவ்வாறு கணித பாட பரீட்சை எழுதியுள்ளார்.

குறித்தநபர் ஐந்தாவது தடவையாக சாதாரண தரப் பரீட்சையில் தோற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.

2011 ஆண்டு முதல் தொடர்ச்சியாக சாதாரண தரப் பரீட்சையின் கணிதப்பாட பரீட்சையில் தோற்றிவருகின்ற குறித்த நபர் அதி உயர் சித்திகளை பெற்றுள்ளார்.

தற்காலத்தில் கணிதப்பாடத் திட்டத்தில் காணப்படுகின்ற குறைப்பாடுகளை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவரும் நோக்கில் இம்முறையும் சாதாரண தரப் பரீட்சையில் தோற்றியதாக குறித்த பரீட்சார்த்தி ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.