இரவில் நன்றாக உறங்க உதவும் 5 உணவுகள்!

703

banana-mik (1)

தூக்கமின்மை நம்மில் நிறையப் பேருக்கு அன்றாட வாழ்க்கையின் தொல்லைகளில் ஒன்றாகவும் தினசரி வாழ்க்கையை பாதிக்கிற ஒரு விடயமாகவும் இருக்கிறது. அதை எப்படியாவது சரி செய்துவிட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட எல்லோருமே முயற்சி செய்திருப்பார்கள்.

இரவு நன்றாக உறங்க உதவும் 5 இயற்கை உணவுகள் பற்றியும் உறக்கம் வர காரணமாக அவற்றில் இருக்கும் வேதியியல் பொருட்களையும் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்

செரிப் பழங்கள்

நம் உடலுக்குள் இருக்கும், உடலியக்கங்களை கட்டுபடுத்தும் ஒரு வகையான உயிரியல் கடிகாரமானது நமது தூக்கத்தையும் கட்டுபடுத்துகிறது. இந்த கடிகாரமானது தூக்கத்தை நெறிப்படுத்த ஆணையிடும் திறனுள்ள மெலடோனின் என்கிற வேதியியல் பொருளின் இயற்கை உறைவிடம் தான் செர்ரி பழங்கள். அதனால் இரவு தூங்க செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு இரண்டு செர்ரி பழங்களை சாப்பிட வேண்டும்.

வாழைப்பழம்

வாழை பழத்தில் பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் சத்துக்கள் நிறையவே இருக்கிறது. அது மட்டுமில்லாமல் எல்ட்ரிப்டோபன் எனும் அமினோ அமிலமும் வாழைப்பழத்தில் இருக்கிறது. இந்த எல்ட்ரிப்டோபன் அமினோ அமிலமானது மூளைக்குள்ளே 5HTP என்னும் ஒரு ரசாயனமாக மாறிவிடும். அதன் பிறகு இந்த 5HTP யானது செரடோனின் மற்றும் மெலடோனினாக மாறிவிடும்.

டோஸ்ட்

பொதுவாக காலை உணவாக அதிகம் சாப்பிடுகிற டோஸ்ட்க்கும் தூக்கத்துக்கும் சம்பந்தம் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மாச்சத்து நிறைந்த உணவுகளில் இன்சுலின் ஹோமோன் உறக்கத்தை தூண்டக்கூடியதாகும். இன்சுலின் ஹார்மோனானது மூளையிலிருந்து ட்ரிப்டோன் மற்றும் செரடோனின் ஆகிய ரசாயனங்களை ரத்தத்தில் அதிகரிக்கச் செய்யும் சமிக்ஞைகளை உருவாக்கிறதாம். மூளையிலிருந்து வெளியாகும் இவ்விரு இரசாயனங்களும் உறக்கத்தை தூண்டிவிடும் திறன் கொண்டவை ஆகும்.

ஓட்ஸ் கஞ்சி

ஓட்ஸ் கஞ்சியும் இரத்ததில் இருக்கிற சர்க்கரை அளவை அதிகப்படுத்தி அந்த சர்க்கரை இன்சுலின் ஹோர்மோன் சுரப்பதை தூண்டிவிட அதன் விளைவாக உறக்கம் தூண்டப்படுகிறது. மூளை இரசாயனங்கள் சுரந்து கடைசியாக நாம தூங்கிவிடலாம்.

சூடான பால்

உறக்கம் தரும் இயற்கை உணவுகளை தரவரிசையில் நாம் மேலே பார்த்த நான்கு உணவுகளுமே புதியவைதான். ஆனா பால் மட்டும் பழையது. வாழைப்பழத்தில் இருக்கும் எல் ட்ரிப்டோபன் அமினோ அமிலம் பாலிலும் இருக்கிறது. அது தான் செரடோனின் உற்பத்தி மூலமாக உறக்கம் வரவைக்கும். அதுமட்டுமில்லாமல் பாலில் அதிக கால்சியம் இருப்பது உறக்கத்தை தூண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

நித்திரை வரவேண்டும் என்பதற்காக இனி யாரும் தூக்கமாத்திரை சாப்பிட வேண்டாம். அதுக்கு பதிலா மேலே உள்ள உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியமான தூக்கத்திற்கு அழைப்பு விடுங்கள்.