யாழில் ரயில் மோதி ஒருவர் பரிதாபமாக பலி!!

636

Train

யாழ்.மாவட்டச் செயலகத்துக்கு அருகில் உள்ள பாதுகாப்பான ரயில் கடவை பகுதியில் இன்று காலை ரயில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று முற்பகல் 10.30 மணியளவில யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு பயணித்த கடுகதி ரயில் குறித்த நபரை மோதியுள்ளது.

ரயிலைக் கவனிக்காது ரயில் பாதையில் குறித்த நபர் சென்று கொண்டிருந்த சமயம் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் உயிரிழந்தார் என்றும், உடனடியாக ரயிலில் சடலம் ஏற்றப்பட்டு யாழ்.பிரதான ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.