வவுனியா ஊடான வடக்கு ரயில் பாதையில் தலாவ மற்றும் தம்வுத்தேகம இடைப்பட்ட பகுதியில் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ரயில் பாதையில் வௌ்ளநீர் தேங்கியுள்ளமையே இதற்குக் காரணம் என ரயில்வே கட்டுபாட்டு நிலையம் அறிவித்துள்ளது.
இதனால் வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணத்தை மேற்கொள்ளவிருந்த ரயில் சாவஸ்திரிபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் கொழும்பு – கோட்டையில் இருந்து வடக்கு நோக்கி செல்லும் ரயில்கள் மாஹவ வரை மட்டுமே சேவையை மேற்கொள்ளும் என ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் கூறியுள்ளது.
எவ்வாறாயினும் குறிப்பிடப்பட்ட கால அட்டவணையின் படி ரயில் சேவைகள் இடம்பெறும் எனவும் வௌ்ளநீர் வடிந்ததும் வடக்கு ரயில் பாதையின் ரயில் போக்குவரத்துக்கள் வழமைக்கு திரும்பும் எனவும் நிலையம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் கண்டியில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் ரயில் கல்கமுவ வரை தனது பயணத்தை மேற்கொள்ளும். வௌ்ளநீர் வடிந்ததும் நிலைமை வழமைக்கும் திரும்பும் என ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.