கடும் மழை காரணமாக இலங்கையின் சில பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன!!

581

அதிக மழை காரணமாக இலங்கையின் சில பிரதேசங்களிலுள்ள போக்குவரத்து பாதைகள் நீரில் மூழ்கியுள்ளது.

பொலனறுவை மட்டக்களப்பு, கல்லெல்ல மற்றும் மன்னம்பிட்டி பிரதேசங்களின் உள்ள பாதைகளே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கிப்படுகின்றன. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அப்பாதைகளை பயன்படுத்தும் சாரதிகளுக்கு மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பதுளை மஹியங்கனை பாதையில் நேற்று இரவு 12 மணியளவில் மண்மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் பாதையின் போக்குவரத்து தடைபட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

3 4