26 இலங்கையர்களை நாடு கடத்தியுள்ளது ஜப்பான்!!

384

Deport

ஜப்பானின் விசேட விமானம் மூலம் இவர்கள் இலங்கைக்கு கடந்த வியாழக்கிழமை நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் 26 வயதுக்கும் 60 வயதுக்கும் உட்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீசா முடிவடைந்தபோதும் அதிக காலம் நாட்டில் தங்கியிருந்த குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். 2013ஆம் ஆண்டு ஜூலை மாதத்தின் பின்னர் ஜப்பானினால் மேற்கொள்ளப்பட்ட பாரிய நாடு கடத்தல் நடவடிக்கை இதுவாகும்.