ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கும் ரசிகர்கள்!!

816

Rajinikanth

ரஜினி அரசியலில் ஈடுபட வற்புறுத்தி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக ரசிகர்கள் அறிவித்துள்ளனர். ரஜினிகாந்த் ரசிகர்களின் அவசர ஆலோசனை கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் தமிழ்நாடு ரஜினிகாந்த் பட்டதாரிகள் பேரவை, இளைஞர் பேரவை, மருத்துவர் பேரவை, மகளிர் பிரிவு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் ரசிகர்கள் பேசியதாவது, ரஜினி நேரடி அரசியலுக்கு வந்தால் நாட்டில் நேர்மையான ஆட்சி, ஊழலற்ற நிர்வாகம் நடக்கும் என்று அரசியல் தலைவர்கள் பலர் கருத்து தெரிவித்து உள்ளனர். எனவே மக்கள் நலன் கருதி ரஜினி அரசியலுக்கு வரவேண்டும்.

ரஜினி அரசியலில் ஈடுபட ரசிகர்கள் தமிழகம் முழுவதும் கோவில்களில் வழிபாடுகள் நடத்தி உள்ளோம். ரசிகர்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது பாராட்டோ பதவியோ அல்ல. தாங்கள் நேரடி அரசியலுக்கு வந்து மக்களுக்கு சேவை செய்ய விருப்பம் உள்ளதா இல்லையா என்பதை ரசிகர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.

தங்களுடைய அரசியல் சம்பந்தப்பட்ட அறிவிப்பு எதுவாக இருந்தாலும் ஏற்போம். இனி வாழ்வோ, அல்லது சாவோ உங்களோடுதான். இதற்காக உண்ணாவிரத போராட்டத்தையும் நடத்தப்போகிறேம். அதை நடத்தும் திகதி விரைவில் அறிவிக்கப்படும் என கூறியுள்ளனர்.