காதலியை பிரிந்த துயரம் தாங்காமல் பெண்ணின் உள்ளாடைகள் அணிந்து உலாவும் நபர்!!

549

Lady

சீனாவில் நபர் ஒருவர் பெண்ணின் உள்ளாடைகள் அணிந்து பேருந்தில் பயணித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள செங்சூ நகரில் பேருந்தில் நபர் ஒருவர், பெண்ணின் உள்ளாடைகள் மற்றும் ஹீல்ஸ் செருப்புகளை அணிந்து பயணித்துள்ளார்.

இவரது இந்த வித்தியாசமான கோலத்தை கண்டு பலர் கேலி செய்தனர். எனினும் அவர் அதை பொருட்படுத்தவில்லை. இதுகுறித்து இவரிடம் சிலர் கேள்வி எழுப்பயிதில், தன்னுடன் நிச்சியிக்கப்பட்ட பெண்ணை தான் மிகவும் காதலித்தாகவும், அவர் திடீரென இறந்துவிட்டதால் அவர் தன்னுடனே இருப்பது போல் உணர அவரது உடைகளை அணிந்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை வீடியோவாய் படம்பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டதில் சிலர் விமர்சித்துள்ளனர். மேலும் சிலர் நபரின் நிலை கண்டு பரிதாபமடைந்துள்ளானர்.

இதற்கிடையே இவர் காதலி பிரிந்த துயரத்தால் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் அதனால் இவ்வாறு நடந்து கொள்கிறார் எனவும் கூறப்படுகிறது.