Android 5.1 Lollipop அப்டேட் விரைவில் வெளியீடு!!

731

android-5-lollipop

கூகுள் நிறுவனம் அண்மையில் Android 5 Lollipop இயங்குதள பதிப்பினை அறிமுகம் செய்திருந்தது. இவ் இயங்குதளப் பதிப்பிற்கான அப்டேட்டான Android 5.1 Lollipop இனை 2015ம் ஆண்டு பெப்ரவரி மாதம் வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள பதிப்பில் நீக்கப்பட்டுள்ள Silent வசதி இப்புதிய பதிப்பில் மீண்டும் அறிமுகம் செய்யப்படவுள்ளதுடன், பிரதான நினைவக முகாமைத்துவம் மேம்படுத்தப்படவுள்ளது.

இவை தவிர வயர்லெஸ் இணைப்பில் காணப்பட்டுள்ள தவறுகள் நீக்கப்பட்டுள்ளன, மின்கல முகாமைத்துவம் மேம்படுத்தப்பட்டுள்ளது, ஒலி அமைப்பில் காணப்பட்ட தவறுகள் நீக்கப்பட்டுள்ளன.