விக்ரம்-எமிஜக்சன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் பிரமாண்டமாக இயக்கியுள்ள படம் ஐ. இப்படத்தை ஒஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவை செய்திருக்கிறார்.
இப்படத்தின் டீசர் மட்டும் பாடல்கள் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. பொங்கலுக்கு படம் ரிலீசாகும் என்று உறுதி செய்யப்பட்டதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. இது வெளியான சிறிது நேரத்திலேயே சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவ ஆரம்பித்தது. டிரைலரை பார்த்த அனைவரும் பாராட்டி வருகின்றனர். இதுவரை ஐ டிரைலரை 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.
ஏற்கனவே ஐ டீசரை 90 லட்சத்திற்கு மேற்பட்ட பார்வையாளர் பார்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.