வவுனியா பிரதேசத்தில் கடந்த இருவாரங்களுக்கு மேலாக பெய்த மழை காரணமாக வவுனியாகுளம் வான்பாய தொடங்கியுள்ளது. அதேபோன்று வவுனியாவின் பல பகுதிகளிலும் உள்ள குளங்கள் கடந்த இருநாட்களில் பெய்த கடும் மழை காரணமாக நீர் வரத்து அதிகரித்து குளங்களின் நீர்மட்டம் உயர்ந்து தற்போது வான்பாய தொடங்கியுள்ளன.
கிறிஸ்மஸ் கொண்டாட்டதுக்கு இன்னும் ஓரிரு நாட்கள் உள்ளநிலையில் மேற்படி குளங்களின் நீர் மட்டம் அதிகரித்ததை தொடர்ந்து பொதுமக்கள் வான்பாயும் குளங்களை பார்வையிட குடும்பம் குடும்பமாக வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.
மார்கழி மாத விடுமுறை கொண்டாடுவதற்கு வசதியாக பொதுமக்கள் தங்களது பிள்ளைகளை வான்பாயும் குளங்களை பார்வையிட கூட்டிசெல்கின்றனர். இதனால் பெரும்பாலான குளங்கள் சுற்றுலாத் தளங்கள் போன்று காணப்படுகின்றன.
-கஜேந்திரன்-














