வவுனியா தோணிக்கல் பிரதேசத்தில் சீரான வடிகாலமைப்பு இன்மையால் அப்பகுதி மக்கள் பெரும் அவலத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.
கோடை காலத்தில் இவ் வடிகாலமைப்பை சீர் செய்து தருமாறு வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையிடம் கோரிக்கை விடுத்தபோதிலும் அவர்கள் அது தொடர்பில் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.
இந் நிலையில் தற்போது பெய்து வரும் கடும் மழையின் காரணமாக இப்பகுதியில் நீர் தேங்கியுள்ளதுடன் வீடுகளுக்குள்ளும் மழை நீர் சென்றுள்ளமையினால் மக்கள் வீடுகளுக்குள் வாழ முடியாது பெரும் துன்பத்திற்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இதேவேளை வருடா வருடம் பிரதேசசபைக்கு சோளவரி செலுத்தியபோதிலும் பிரதேச சபை கவனம் செலுத்தாமையினாலேயே இவ்வாறான நிலை ஏற்பட்டதாக இப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.