வவுனியா, தோணிக்கல் பகுதியில் இன்று காலை புகையிரதம் முன்பாய்ந்து சிறுவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டே இவர் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் ரயிலில் மோதி தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்ற புகையிரதம் வவுனியா தோணிக்கல் பகுதியில் பயணித்த போதே அப்பகுதியைச் சேர்ந்த சிறுவன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளான்.
வவுனியா, தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த அல்பிரட் டிசாந்த் (16) என்ற சிறுவனே தற்கொலை செய்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தொடாபான மேலதிக விசாரணையை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.







