வவுனியா கோவில்குளம் முன்பள்ளி புனரமைப்பு!!

528

வவுனியாவில் தொடர்ந்து பெய்து வரும் மழையினாலும் காற்றினாலும் பாதிக்கப்பட்ட கோவில்குளம் முன்பள்ளியினை உடனடியாக கற்றல் நடவடிக்கைகளுக்கு ஏற்ற முறையில் புனரமைத்து தருமாறு முன்பள்ளியின் ஆசிரியர், வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களிடம் கேட்டுக்கொண்டதற்கினங்க, உடனடியாக கோவில்குளம் இளைஞர் கழகத்தினால் கூரைப்பகுதி புனரமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கோவில்குளம் இளைஞர் கழகத்தின் சிறுவர் முன்பள்ளி அபிவிருத்திக்கென இளைஞர் கழகத்தின் அமெரிக்க கிளையினரால் ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து உடனடியாக கோவில்குளம் சிறார்களின் கற்றல் நலன் கருதி இச் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும், சிறார்களின் தெளிவானதும் சீரானதுமான கல்வி அறிவே எமது இனத்தின் சிறந்த கல்விக்கான அத்திவாரமாகும் என இளைஞர் கழக ஸ்தாபகர் திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) தெரிவித்தார்.

IMG_5118 IMG_5120 IMG_5128 IMG_5132 IMG_5214 IMG_5218 IMG_5219