வவுனியாவில் 20 வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிய தமிழ் விருட்சம் அமைப்பு!!

271

வவுனியா மாவட்ட சமூக சேவை திணைக்களத்தில் தமது வறுமை நிலையை கூறி தமது பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் படி சமூக சேவை திணைகளத்தில் பதிந்த 7 குடும்பங்களை சேர்ந்த 20 மாணவர்களுக்கு சமூக சேவை திணைக்களம் தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்புக்கு விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக இந்த கற்றல் உபகரணங்கள் சமூக சேவை திணைகளத்தில் வைத்து வழங்கி வைக்க பட்டது .

இவர்கள் அனைவரும் ஆண்டு 1 தொடக்கம் உயர்தரம் வரை வவுனியாவின் பல்வேறு பாடசாலைகளில் கல்வி கற்று வருகிறார்கள். இந்த நிகழ்வில் வவுனியா மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ் எஸ் வாசன், தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன் ) செயலாளர் மாணிக்கம் ஜெகன், சமூக சேவை திணைகளத்தில் கடமையாற்றும் மேனன், அனுசியா, துவாரகா, நிகாலினி, துஸ்யந்தி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

DSCN3019 DSCN3005 DSCN3006 DSCN3007 DSCN3008 DSCN3009 DSCN3010 DSCN3011 DSCN3014DSCN3016 DSCN3022 DSCN3027 DSCN3032 DSCN3020