புல்லட் ரயிலையும் மிஞ்சும் உலகின் அதிவேக ரயில்!!

574

Train

அமெரிக்காவில் உலகின் முதல் அதிவேக சூப்பர் டியூப் ரயில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்து சான்பிரான்சிஸ்கோவுக்கு செல்ல தற்போது 12 மணி நேரம் ஆகிறது.

ஆனால் இந்த புதிய சூப்பர் டியூப் ரயில் மூலம் 35 நிமிடங்களில் செல்லமுடியும் என்று கூறப்படுகிறது. அதாவது, மணிக்கு 1200 கிலோமீட்டர் வேகம் செல்லும் இந்த சூப்பர் டியூப் ரயிலை வடிவமைக்க ஹைபர்லூப் டிரான்ஸ்பொடேஷன் டெக்னாலஜிஸ் பணியில் ஈடுபட்டுள்ளது.

உலகம் முழுவதிலுமிருந்து 100க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்தப் பணியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
இன்னும் 10 ஆண்டுகளில், பயணிகள் இந்த டியூபில் பயணம் செய்யலாம் என்று டெல்சா மோட்டார் நிறுவன தலைமை அதிகாரியும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான இலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

மேலும், 1600 கிலோமீட்டர் தூரம் உள்ள நகரங்களுக்கு இடையிலான பயணத்திற்கு இந்த ஹைபர் லூப் மட்டுமே பயன்படும் என கூறப்படுகிறது.