வவுனியாவில் சக்திFM வானொலியின் நத்தார் கொண்டாட்டம் : நேயர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சக்தியின் சாண்டா!!(படங்கள், காணொளி)

2046

வவுனியாவில் இம்முறை என்றுமில்லாதவாறு சக்தி வானொலி இம்முறை தனது நத்தார் தின ஆராதனைகளை வவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்திலிருந்து உலகெங்கும் வசிக்கும் தனது நேயர்களை சென்றடையும் வண்ணம் நத்தார் தின ஆராதனைகளை நேரடியாக சக்தி வானொலியின் நிலாச்சோறு நிகழ்வினை தொகுத்து வழங்கும் நேயர்களின் அபிமானம் பெற்ற வவுனியாவை சேர்ந்த அறிவிப்பாளர் செல்டன் அன்டனி தலைமையில் ஏற்பாடு செய்திருந்தது.

மேற்படி நிகழ்வு நேயர்களின் அபிமானம் பெற்ற வவுனியாவை சேர்ந்த அறிவிப்பாளர் செல்டன் அன்டனி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அத்துடன் வவுனியாவில் இருந்து சக்தி வானொலிக்கு கிறிஸ்மஸ் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு குறுஞ்செய்தி அனுப்பி குலுக்கல் மூலம் தெரிவு செய்யப்பட்ட நேயர்களின் வீடுகளுக்கு நத்தார் பாப்பா (சக்தியின் சண்டா ) ஏராளமான பரிசுபொருட்களுடன் சக்தியின் நிலாச்சோறு புகழ் செல்டன் அண்டனியோடு விஜயம் செய்த நிகழ்வு நேற்று கொட்டும் மழை மற்றும் வெள்ளத்தின் மத்தியிலும்இடம்பெற்றது.

வவுனியாவில் தெரிவு செய்யபட்ட 35 நேயர்களின் வீடுகளுக்கு சென்றுசக்தியின் சண்டா பரிசுகளை வழங்கி நேயர்களை திகைப்பில் ஆழ்த்தினார். வவுனியாவின் நகரம், கோவில்குளம் இறம்பைக்குளம், பூந்தோட்டம், கோவில்குளம், தெற்கிலுபைக்குளம் பண்டாரிக்குளம், கரப்பன்காடு, குருமன்காடு, மகாஇறம்பைக்குளம், தவசிகுளம், கூமாங்குளம், உக்கிளாங்குளம், நெளுக்குளம், வேப்பங்குளம், தோணிக்கல் ஆகிய பகுதிகளுக்கு சென்று நேயர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறுவர்களுடன் ஆடிப்பாடி குதூகலப்படுத்தினார். இன் நிகழ்வுகள் நேற்று காலை முதல் நள்ளிரவு வரை இடம்பெற்றது .

 

DSC_0796 55555 DSC_0622 DSC_0626 DSC_0628 DSC_0634 DSC_0637 DSC_0648 DSC_0653 DSC_0658 DSC_0668 DSC_0671 DSC_0677 DSC_0678 DSC_0688 DSC_0695 DSC_0696DSC_0704 DSC_0707 DSC_0709 DSC_0712 DSC_0725 DSC_0730 DSC_0733 DSC_0734 DSC_0746 DSC_0749DSC_0763 DSC_0756 DSC_0771 DSC_0780 DSC_0791 DSC_0814 DSC_0808 DSC_0801  DSC_0794DSC_0801DSC_0808DSC_0814DSC_0816DSC_0821DSC_0825DSC_0859DSC_0863