வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்கமும் வவுனியா கலை, இலக்கிய நண்பர்கள் வட்டமும் இணைந்து ஏற்பாடு செய்த தமிழ் பெண் புலவர் ஔவை பிராட்டியின் நினைவு தினம் 04.01.2015 அன்று காலை 8.30 மணிக்கு வவுனியா வெளிக்குளம் பாடசாலைக்கு அருகில் அமைந்துள்ள ஒளவையார் சிலையடியில் தமிழ் மணி அகளங்கன் தலைமையில் சிலையை பராமரிக்கும் முன்னாள் நகரசபை உறுப்பினர் தேசமான்ய குமாரசாமி அனுசரணையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் முன்னாள் உபநகரபிதா சந்திரகுலசிங்கம் (மோகன்), முன்னாள் நகரசபை உறுப்பினர் தேசமான்ய குமாரசா, வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்க தலைவர் சந்திரகுமார் (கண்ணன்), கலைஞர் மாணிக்கம் ஜெகன், ஓய்வு பெற்ற அதிபர் சிவஞானம், வவுனியா மாவட்ட மக்கள் ஒன்றிய செயலாளர் சஜீஸ், ஓய்வு பெற்ற கோட்ட கல்வி அதிகாரி நடராசா, அதிபர் நேசன், நகரசபை அலுவலர் பபிந்தன் உட்பட சமுக ஆர்வலர் விக்னா, நிகேதன் ,உட்பட பலரும் கலந்து கொண்டனர் .
முதலில் மாலை அணிவித்தும் பூப் போட்டும் ஔவை பாட்டிக்கு கௌரவ படுத்தியபின் தமிழ் மணி அகளங்கன் தலைமை உரை நிகழ்த்தினார். இறுதியில் சந்திரகுமார் (கண்ணன்) அவர்களின் நன்றி உரையுடன் நிகழ்வு நிறைவடைந்தது.



















