ஒரு பந்தில் 7 ஓட்டங்கள் பெற்று உலக சாதனை படைத்த கிரேக் பிராத்வெய்ட்!!

279

kraigg

தென் ஆபிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கிரேக் பிராத்வெய்ட் ஒரே ஒரு பந்தில் உலக சாதனை படைத்துள்ளார்.

தென் ஆபிரிக்கா- மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி நியூலேன்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. அந்தப் போட்டியில் தான் இந்த சுவாரஸ்யமான உலக சாதனை அரங்கேறியது.

தனக்கு வந்த பந்தை வேகமாக அடித்து விரட்டிய பிராத்வெய்ட், உடனடியாக ஓட்டங்கள் எடுக்க ஓடினார். அப்படி ஓடியே 3 ஓட்டங்களை எடுத்து விட்டார். அந்த சமயம் பந்தை வசப்படுத்திய தென் ஆபிரிக்க விக்கெட் கீப்பர் டிவில்லியர்ஸ், அதை ஸ்டம்ப்பை நோக்கி வீசினார்.

சற்று வேகமாக வீசியதால் பந்து ஸ்டம்பில் படாமல் எல்லைக் கோட்டை நோக்கி ஓடிக் கடந்து விட்டது. இதனால் பிராத்வெய்ட்டுக்கு 7 ஓட்டங்கள் கிடைத்து விட்டன.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரே பந்தில் 7 ஓட்டங்கள் எடுத்த சம்பவம் இப்போது தான் நடந்துள்ளது. அந்த வகையில் இது சாதனையாகும் என்று ஆபிரிக்க கிரிக்கெட் புள்ளிவிவர நிபுணர் அண்ட்ரூ சாம்சன் தெரிவித்துள்ளார்.

உலக சாதனை படைத்த பிராத்வெய்ட் 165 ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்த டெஸ்ட் தொடரை தென் ஆபிரிக்கா வென்று விட்டது குறிப்பிடத்தக்கது.