நடிகை திரிஷா கடந்த 10 வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தற்போது அஜித் ஜோடியாக என்னை அறிந்தால் படத்தில் நடித்துள்ளார்.
இப்படம் வரும் ஜனவரி 29ம் திகதி வெளியாகவுள்ளது. இதுதவிர, ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்துள்ள பூலோகம் படம் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.
இந்நிலையில், தயாரிப்பாளர் வருண்மணியனுக்கும், திரிஷாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்தன. ஆனால், இருவரும் இந்த செய்திக்கு எந்தவித பதிலும் அளிக்கவில்லை.
இதையடுத்து, இருவரும் தனி விமானத்தில் தாஜ்மகாலை சுற்றி வந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகின. வருண்மணியனும், திரிஷாவும் இறுக்கி அணைத்தப்படியான புகைப்படங்களும் இணையதளத்தில் வெளியாகின.
இவர்களது நிச்சயதார்த்த சர்ச்சை இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வரும் ஜன.23ம் திகதி வருண்மணியனுக்கும், தனக்கும் நிச்சயதார்த்தம் நடக்கவுள்ளதாக திரிஷா தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த நிச்சயதார்த்த விழா சிறிய அளவில் இருவீட்டாரின் முன்னிலையில் நடக்கவிருப்பதாகவும், திருமண திகதியை முடிவு செய்யாததால் அதனை பின்னர் அறிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
எந்த படங்களையும் தவிர்க்கும் எண்ணம் எனக்கு இல்லை. இந்த வருடத்தில் 2 புதிய படங்களில் விரைவில் ஒப்பந்தமாக உள்ளேன். இந்த வருடத்தில் என்னுடைய 4 படங்கள் வெளியாகும் என்றும் திரிஷா குறிப்பிட்டுள்ளார்.






