சித்தார்த்-சமந்தாவின் இரண்டரை வருட காதல் முறிந்தது!!

543

Siddharth-and-Samantha

சித்தார்த், சமந்தாவின் இரண்டரை வருட காதல் முறிந்துவிட்டதாகவும், இருவரும் தனித்தனியாக பிரிந்து விட்டதாகவும், சில தினங்களுக்கு முன்புதான் இருவரும் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இருவரும் 2012ல் ஜபார்தஸ்த் என்ற தெலுங்கு படத்தில் இணைந்து நடித்தனர். அப்போது நட்பு ஏற்பட்டது. பிறகு அது காதலாக மலர்ந்தது. இருவரும் பொது விழாக்களில் ஜோடியாக பங்கேற்றார்கள்.

சினிமா நிகழ்ச்சிகளிலும் கைகோர்த்தபடி வந்து கலந்து கொண்டனர். அருகருகே நெருக்கமாக அமர்ந்து போட்டோவுக்கும் போஸ் கொடுத்தார்கள். அத்துடன் கோவில்களுக்கும் ஜோடியாக சென்றார்கள். அருகருகே உட்கார்ந்து யாகம், பூஜைகளும் செய்தனர்.

இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள முடிவு எடுத்து இருப்பதாக கூறப்பட்டது. இதற்கு இருவீட்டாரின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்து விட்டனர் என்றும் நெருக்கமானவர்கள் கூறினார்கள்.

இந்த நிலையில்தான் இருவரும் காதலை திடீரென முறித்து கொண்டு பிரிந்து விட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. காதல் முறிவுக்கான காரணம் தெரியவில்லை. இருவரும் அவரவர் வேலையில் தீவிரமாகியுள்ளனர். சந்திப்பதையோ பேசுவதையோ தவிர்க்கிறார்கள்.

சமந்தா புத்தாண்டை தோழியுடன் கோவாவில் கொண்டாடினார். அந்த படங்களையும் இணையத்தில் வெளியிட்டார். தெலுங்கு பட விழாக்களிலும் தனியாகவே கலந்து கொள்கிறார்.

சித்தார்த்தும் தனியாகவே நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். தமிழில் நடித்த காவியத் தலைவன் படம் கடைசியாக வந்தது. எனக்குள் ஒருவன் என்ற படத்தில் தற்போது நடித்துக் கொண்டு இருக்கிறார். சமந்தா 10 எண்றதுக்குள்ள என்ற படத்தில் விக்ரம் ஜோடியாக நடிக்கிறார். தெலுங்கு படமென்றும் கைவசம் உள்ளது.