வவுனியா, நெடுங்குளம் பகுதியில் இராணுவ டிப்பென்டர் ரக வாகனம் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவத்தில் எஸ்.மலலசேகர (56) என்பவரே காயமடைந்தவராவார். வவுனியா, மாமடு வீதி வழியாக வந்த மோட்டர் சைக்கிளும் நெடுங்குளம பிரதான வீதி வழியாக வந்த இராணுவ டிப்பென்டர் ரக வாகனமும் மோதியதில் மோட்டர் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.
இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் வவுனியா பொலிஸார் டிப்பென்டர் வாகனத்தின் சாதியான சிப்பாய் ஒருவரை கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






