வவுனியாவில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு!!

516

V1

இலங்கையின் 7ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக இன்று காலை 7 மணிக்கு ஆரம்பித்த வாக்குப்பதிவில் கிராம மற்றும் நகர்புறங்களில் மக்கள் காலையிலேயே வாக்களிக்க ஆரம்பித்துள்ளனர்.

வவுனியாவில் அசம்பாவிதங்கள் எதுவுமின்றி வாக்குபதிவு இடம்பெற்று வருகின்றது. 109705 வாக்காளர்கள் வவுனியா மாவட்டத்தில் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ள நிலையில் 134 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெற்று வருகின்றது.

வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் ஆகியோரும் வவுனியாவில் வாக்களித்துள்ளனர்.

இந் நிலையில் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் கண்காணிப்பாளர்கள் வாக்களிப்பு நிலையங்களை பார்வையிட்டு வருகின்றனர்.

இதேவேளை வவுனியா மாவட்டத்தில் 12.45 மணிவரையான வாக்குப்பதிவில் 37 வீதமானோர் வாக்குகளை பதிவு செய்துள்ளதாக வவுனியா மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

109705 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 12 மணிவரை 40,880 பேர் வாக்களித்துள்ளதுடன் மேலும் பலர் வாக்களிப்பு நிலையங்களை நோக்கி செல்வதனையும் அவதானிக்க முடிகின்றது.

இதேவேளை வவுனியாவில் மதியம் வரை எவ்விதமான அசம்பாவிதங்களும் இடம்பெறாத நிலையில் பொலிசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றர்.