வவுனியா ஓமந்தையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!!

629

v

வவுனியா ஓமந்தை காட்டுப்பகுதியில் இருந்து 35 வயதுடைய குடும்பஸ்தரான செல்வராசா தயானந்தன் என்பவரின் சடலத்தை ஓமந்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

வீட்டில் இருந்து நேற்று முன்தினம் (06.01) காலை சென்ற இவர் வீடு திரும்பாமையினால் வீட்டார் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந் நிலையில் ஓமந்தை கிராம சேவகர் மற்றும் பொலிஸார் சம்பந்தப்பட்ட நபர் தொடர்பில் தேடுதலில் ஈடுபட்டபோது நேற்று மாலை அவரின் துவிச்சக்கரவண்டியை மீட்டிருந்தனர்.

இந் நிலையில் தொடர்ச்சியாக தேடுதல் நடத்திபோது நேற்று காலை சடலம் ஓமந்தை பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை சம்பவ இடத்திற்கு நீதிவான் வருகை தந்து சடலத்தை பார்வையிட்டதையடுத்து சடலம் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.