நாட்டை விட்டுத் தப்பிச் சென்றவர்களை ஜனாதிபதி திரும்ப அழைப்பு!ஊடகங்கள் இணையங்கள் மீதான தடை நீக்கம் !

385


EU-Media-Futures-Forum-pic_0

நாட்டை விட்டு தப்பிச் சென்ற ஊடகவியலாளர்கள் மற்றும் மாற்றுச் சிந்தனையாளர்கள் மீளவும் நாடு திரும்ப முடியும் என புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.



அடக்குமுறைகள் காரணமாக நாட்டை விட்டு தப்பிச் சென்று வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ள ஊடகவியலாளர்கள் மாற்றுச் சிந்தனையாளர்களுக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இணையத்தளங்கள் முடக்கப்பட்ட மாட்டாது என ஜனாதிபதியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.



ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள் கண்காணிக்கப்பட மாட்டார்கள் எனவும் தொலைபேசிகள் ஓட்டுக் கேட்கப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



இன்று முதல் எங்களை விமர்சனம் செய்ய உங்களுக்கு பூரண சுதந்திரம் உண்டு.


ஊடக சுதந்திரத்தை அடக்கி ஒடுக்க முயற்சிப்போருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

ஊடகங்கள் மீதான தணிக்கைகள் இனி வரும் காலங்களில் அமுல்படுத்தப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.


ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்