பெண் தோழியுடன் நிர்வாணமாய் பைக்கில் பறந்த மாணவனால் வெடித்த சர்ச்சை!!(வீடியோ)

546

Capture

பிரித்தானியாவை சேர்ந்த மாணவன் ஒருவர் தன் பெண் தோழியுடன் நிர்வாணமாய் வாகனம் ஓட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கம்போடியா தலைநகர் பினோம் பினெனில் பிரித்தானியாவின் வெஸ்ட் ஓப் ஸ்காட்லாண்ட் பல்கலைக்கழகத்தில் பயிலும் கிராபோர்ட் பிரவுன் (24) என்ற கல்லூரி மாணவர், தன் பெண் தோழி காட்டரீனா ஆர்னியோ(22) மற்றும் கியன்கார்லோ அலோக்கா(30) என்ற நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ளார்.

இந்நிலையில் அவர் பினோம் பினெனில் நகரலிருந்து சுமார் 50 மீற்றர் தொலைவில், தன் பெண் தோழியுடன் பைக்கில் நிர்வாணமாக பயணித்துள்ளார். இவர்களுடன் பிரவுனின் நண்பராண கியன்கார்லோவும் மற்றொரு பைக்கில் பயணித்ததாக கூறப்படுகிறது.

இதை பார்த்த பொலிசார், பிரவுன் அவரது பெண் தோழி உட்பட மற்றொரு நபரையும் சுற்றிவளைத்து சம்பவ இடத்திலேயே கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து பொலிசார் கூறுகையில், இவ்வாறு நிர்வாணமாய் திரிவது எங்கள் நாட்டின் கலாச்சாரத்திற்கு கேடு என்றும் அயல்நாட்டு மக்கள் என்பதால் இச்செயலை எங்களால் அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களில் காட்டரீனா பின்லாந்து நாட்டவர், கியன்கார்லோ இத்தாலியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.