குண்டு தம்பதியை சபிக்கும் மக்கள் : காரணம் என்ன!!

1258

பிரித்தானியாவில் சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட குண்டான தம்பதியினர் மீது அந்நாட்டு மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

பிரித்தானியாவின் பிளைமெளத் மாகாணத்தை சேர்ந்த ஸ்டீபன் பீர்-மிச்சிலி கோம்பி கடந்த 6ம் திகதி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இவ்விரு நபர்களும் அரிய நோய் ஒன்றால் பாதிக்கப்பட்டு அளவுக்கு அதிகமான எடை கொண்டவராய் உள்ளதால், சில நாட்களிலேயே இறந்துவிடும் அபாயத்தில் உள்ளனர்.

எனவே இவர்களுக்கு அரசாங்கமே செவிலியர்களை அமர்த்தி ஒரு ஆண்டுக்கு 3000 யூரோக்களை செலவு செய்து வருகின்றது.

இந்நிலையில் 6 குழந்தைகளுக்கு தந்தையான ஸ்டீபன் 5 முறை விவாகரத்து பெற்றவர் என்றும் 7 குழந்தைகளுக்கு தாயான மிச்சிலி இரண்டாவது முறையாக ஸ்டீபனை திருமணம் செய்து கொண்டுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

ஆனால் இவர்களுக்கு செலவு செய்வதில் தங்களது வரிப்பணம் வீணாவதாக அந்நாட்டில் பெரும்பாலான மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதற்கு விளக்கமளித்த ஸ்டீபன் தொலைக்காட்சி ஒன்றில் அளித்த பேட்டியில் கூறியதாவது, நான் யாருடைய பணத்தையும் அபகரிக்கவில்லை.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு எனக்கு பக்கவாதம் ஏற்பட்டதால் நாளடைவில் நான் குண்டானேன். எனவே அரசாங்கத்தின் உதவியை நாடியுள்ளேன் என பேட்டியளித்துள்ளார்.

மேலும் தன் குழந்தைகளை பராமரிப்பதில் நேரம் செலுத்தியதில் தனக்கு உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாததால் இந்த கதி ஏற்பட்டது என ஸ்டீபனின் மனைவி மிச்சிலி விளக்கமளித்துள்ளார்.

F1 F