திருமணத்தால் தீவிரவாதியான பெண் : பிரான்ஸ் தாக்குதலில் திடுக்கிடும் தகவல்கள்!!

523

TR

பிரான்ஸ் சுப்பர்மார்கெட் தாக்குதல் விவகாரத்தில் தேடப்படும் பெண் திருமணத்தால் தீவிரவாதியானதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள சூப்பர்மார்க்கெட்டுக்குள் கடந்த 2ம் திகதி புகுந்து சிலரை பிணைக்கைதியாக பிடித்த அமேதி கவ்லிவியை பொலிசார் சுட்டு வீழ்த்தியுள்ளனர். இவரது மனைவி ஹயாத் பவ்மெடின் (26).

தற்போது பிரான்சை விட்டு தப்பியோடிவிட்ட இவர், அமேதி கவ்லிபாலியை திருமணம் செய்த பிறகு தான் ஜிஹாத் வழியில் சென்றுள்ளார்.

காசாளராக பணியாற்றிய ஹயாத், கவ்லிபாலியை சந்தித்தபோது அவரது ஜிஹாதி கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுள்ளார் என்றும் அதனால் அவரை மணமுடித்தார் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், என் கணவர் என்னை பேசியே கவர்ந்தார், ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் பாலஸ்தீனத்தில் நடந்த படுகொலைகள் பற்றி என்னிடம் தெரிவித்தார். உண்மையான தீவிரவாதிகள் யார் என நான் கேட்டதற்கு, அமெரிக்கர்கள் தான் என கூறினார்.

தன்னுடைய மதத்தை பாதுகாக்கவும், அப்பாவிகளின் கொலைக்கு பழிவாங்கவும் ஒவ்வொரு நபருக்கும் உரிமை உள்ளது, நான் அமேதியை சந்தித்த பிறகு ஏராளமான ஆன்மிக புத்தகங்களை வாசித்தேன் என ஹயாத் தெரிவித்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவல்கள் அனைத்தும் கடந்த 2010ம் ஆண்டு போதைப் பொருள் வழக்கில் ஹயாதை விசாரித்ததில் தெரியவந்ததாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கிடையே இவர் சிரியாவிற்கு சென்றுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.