வவுனியா அரச வீடமைப்புதிட்டத்தில் அடிப்படை வசதிகள் இன்மையால் மக்கள் குடியேறுவதில் சிரமம்!!

486

V

5 ஐந்து வருடங்களாக அடிப்படை வசதிகள் செய்து தரப்படாமையினால் மக்கள் குடியேற முடியாது உள்ளதாக வவுனியா ஓமந்தை அரச உத்தியோகத்தர் வீட்டுத்திட்டத்தில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

வவுனியாவில் கடமையாற்றும் 600 அரச உத்தியோகத்தர்களுக்கு ஓமந்தையில் காணிகள் 2011 ஆம் ஆண்டு வழங்கப்பட்டுள்ள போதிலும் 48 குடும்பத்தினரே இதுவரை குடியேறியுள்ளனர்.

இந் நிலையில் ஏனையவர்கள் குடியேறாமைக்கான காரணத்தை அவர்களிடம் கேட்டபோதே இவ்வாறு தெரிவித்தனர். மேலும் அவர்கள் தெரிவிக்கையில்,

காணிகளுக்கு செல்வதற்கான வீதிகள் வெட்டிக் கொடுக்கப்பட்ட நிலையில் அரச உத்தியோகத்தர்களை குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் வீடுகளை அமைக்த்து வசிக்குமாறும் அதிகாரிகளால் பணிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் அரச உத்தியோகத்தர்கள் பலர் ஆர்வமாக வீடுகளை பெரும் பணச்செலவில் அமைத்தபோதிலும் அங்கு வசிப்பதற்கு ஏதுவாக வீதிகள் அமைத்துக் கொடுக்கப்படாமலும் அயலில் உள்ள காடுகள் அகற்றப்படாமலும் காணப்பட்டமையினால் மக்கள் வாழ்வதற்கு அச்சமானதும் ஏதுவானதாகவும் அமையால் இருந்தது.

இந் நிலையில் அப்பகுதியில் வசிக்கும் அரச உத்தியோகத்தர்கள் தமக்கான அமைப்பை உருவாக்கி பல்வேறு கோரிக்கைகளை

அரச அதிபரிடம் விடுத்தபோதிலும் அவற்றில் பல நிறைவேற்றப்படாமையினால் பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுத்து வருவதாக தெரிவிக்கின்றனர்.