அமெரிக்க இராணுவ டுவிட்டர், யூடியூப் தளங்களில் தீவிரவாதிகள் ஊடுருவல் !

401

2073317_cyber-attack_7hqdjmj4am3d2cszxsyeykq4xpncurxrbvj6lwuht2ya6mzmafma_610x457

வாஷிங்டன்: அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவின் (@CENTCOM)  டுவிட்டர் மற்றும் யூடியூப் தளங்களில் சிலர் அத்துமீறி நுழைந்துள்ளனர். இந்த ஹேக்கிங் செயலுக்கு, ஈராக் மற்றும் சிரியாவில் இருந்து செயல்படும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காட்டிக் கொண்ட ஒரு குழு பொறுப்பேற்றுள்ளது. இருப்பினும், இது ஐ.எஸ். தீவிரவாதிகளின் சதி வேலைதானா என்பது குறித்து அமெரிக்கா தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.

அமெரிக்க நேரப்படி சரியாக 12.30 மணியளவில், (@இஉNகூஇOM)டுவிட்டர் பக்கத்தில் விஷமிகள் சிலர் அமெரிக்க இராணுவ உயர் அதிகாரிகள் உட்பட வீரர்கள் பலரின் முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட விபரங்களை Cyber Caliphate என்ற ஹேஷ்டேகை உருவாக்கி பதிவிட தொடங்கினர். இதனையடுத்து, அமெரிக்க இராணுவ டுவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக, அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, சைபர் பாதுகாப்பு, சைபர் குற்றங்களை தடுப்பது தொடர்பாக உரையாற்றவிருந்த வேளையில், இராணுவ டுவிட்டர் பக்கத்தில் அத்துமீறப்பட்டிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும், அமெரிக்க ராணுவ டுவிட்டர் பக்கத்தில் ”நாங்கள் வருகிறோம். ஏற்கனவே உங்கள் பாதுகாப்பு வலைப்பக்கங்களில் ஊடுருவிவிட்டோம். இனி அமெரிக்காவின் பாதுகாப்பு மையங்களில் இருக்கும் ஒவ்வொரு கணினியிலும் ஊடுருவுவோம்” என தீவிரவாதிகள் எச்சரிக்கை நிலைத்தகவல் பதிவிட்டுள்ளனர். தீவிரவாதிகளால் ஹேக் செய்யப்பட்ட டுவிட்டர் பக்கம் அந்நிறுவனத்தின் உதவியுடன் 30 நிமிடங்களில் சரி செய்யப்பட்டது. இதனையடுத்து, டுவிட்டர் பக்கத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் எனக் கூறிய நபர்கள் பதிவு செய்திருந்த ஹேஷ்டேக்கும் எச்சரிக்கை நிலைத்தகவலும் நீக்கப்பட்டன.