“இறைவன் இலங்கையை ஆசீர்வதித்துக் காப்பாராக” : ருவிட்டரில் தமிழ்மொழியில் பாப்பரசரின் ஆசிச் செய்தி!!

1057

PoP

பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் முதல் தடவையாக தனது உத்தியோகபூர்வ ருவிட்டர் தளத்தில் இலங்கை மக்களுக்கு தமிழ் மொழியில் ஆசிச்செய்தி வெளியிட்டுள்ளார்.

பாப்பரசர் இலங்கைக்கான பயணத்தை நிறைவு செய்து கொண்டு நேற்றுக் காலை கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாகப் பிலிப்பைன்ஸ் நோக்கிப் பயணமானார்.

அதற்கு முன்னதாக அவர் தனது உத்தியோகபூர்வ ருவிட்டர் தளத்தில் இறைவன் இலங்கையை ஆசீர்வதித்துக் காப்பாற்றுவாராக என்று தமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில் தனது ஆசிச்செய்தியை பதிவு செய்துள்ளார்.