வவுனியா நீலியாமோட்டை கிராமத்தில் நியூசிலாந்து ஸ்ரீ கணேசா ஆலய சந்துரு குருக்கள், வாசு குருக்கள், ஆலய பொறுப்பு சபை உறுப்பினர் திரு ரா.பாலராஜா ஆகியோரின் அனுசரணையில் தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்களின் ஏற்பாட்டில் பொங்கல் விழா 15.01.2015 மாலை 4 மணிக்கு நடைபெற்றது.
இந்த பொங்கல் விழாவின் பிரதம விருந்தினராக வடமாகாணசபை சுகாதார, சுதேசிய வைத்தியத்துறை அமைச்சர் கௌரவ ப.சத்தியலிங்கம் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக வடமாகணசபையின் உறுப்பினர்கள் கௌரவ ம.தியாகராசா, கௌரவ இ.இந்திரராசா , கௌரவ சி.சிவமோகனும்
சிறப்பு விருந்தினர்களாக
இலங்கை வங்கியின் நகர கிளை முகாமையாளர் ரோய் ஜெயக்குமார் , கலாநிதி தமிழ் மணி அகளங்கன், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் இன்தமிழ் இனியன் எஸ் எஸ் வாசன், சமூக ஆர்வலர் வை.கருணாநிதியும் கலந்து கொண்டனர் .
இவர்களுடன் தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்) செயலாளர் மாணிக்கம் ஜெகன், ஊடகவியலாளர் கபிலநாத், வடமாகாணசபை சுகாதார, சுதேசிய வைத்தியத்துறை அமைச்சரின் செயலாளர் திரு ப.சத்தியசீலன், பிரதேசசபை உறுப்பினர் சிவம், சமூக ஆர்வலர்கள் இமயவன், மாணிக்கம், நிகேதன், கேசவன், தயான் ஆகியோருடன் நீலியாமோட்டை அமைப்புகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
விசேட பொங்கல் பூசை நிகழ்வுகள் நடை பெற்ற பின் உரையாற்றிய
தமிழ் மணி அகளங்கன் அவர்கள் கிராமத்தில் இவ்வாறான விழாக்களை நடத்துவது பாராடுதலுக்குரியது எனவும் பொங்கலின் சிறப்புகளையும் விளக்கினார்.
பின்னர் உரை நிகழ்த்திய பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வடமாகாணசபை சுகாதார, சுதேசிய வைத்தியத்துறை அமைச்சர் கௌரவ ப.சத்தியலிங்கம் அவர்கள் கிராமங்களில் இந்த பொங்கல் விழாவை செய்வதனால் இந்த கிராம மக்களின் பிரச்சனைகள், குறைகளை அந்த மக்கள் அனைவரும் எம்மிடம் தெரிவிக்க வாய்ப்பு கிடைப்பதாகவும் அதன் மூலம் அவர்களுக்கான சேவைகளை தீர்வுகளை நாம் செய்ய முடிவதாகவும் இனி வரும் காலங்களிலும் இவ்வாறன நிகழ்வுகளை அடிப்படை வசதிகள் அற்ற கிராமங்களில் ஏற்பாடு செய்து அவர்களின் குறைகளை தீர்க்க எல்லோரும் பாடு பட வேண்டும் என்றும் இன்று இந்த கிராமத்தில் ஏற்பாடு செய்த தமிழ் விருட்சத்துக்கும், அனுசரணை வழங்கிய நியூசிலாந்து ஸ்ரீ கணேசா ஆலய சந்துரு குருக்கள், வாசு குருக்கள், ஆலய பொறுப்பு சபை உறுப்பினர் திரு ரா.பாலராஜா ஆகியோருக்கும் நன்றியையும் தெரிவித்து கொண்டதுடன் நீலியாமோட்டை உட்பட அனைத்து தமிழ் மக்களுக்கும் பொங்கல் வாழ்த்தையும் தெரிவித்து கொண்டார் .
அடுத்து உரையாற்றிய வடமாகணசபையின் உறுப்பினர்கள் கௌரவ சி.சிவமோகன் மற்றும் கௌரவ ம.தியாகராசா ஆகியோரும் அதே கருத்தை முன் வைத்து உரையாற்றியதுடன் ஏற்பாடு செய்த தமிழ் விருட்சத்துக்கும் அனுசரணை வழங்கிய நியூசிலாந்து உறவுகளுக்கு நன்றியை தெரிவித்து கொண்டதுடன் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் பொங்கல் வாழ்த்தையும் தெரிவித்து கொண்டனர்.
இறுதியாக நன்றி உரையை தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பின் செயலாளர் மாணிக்கம் ஜெகன் நிகழ்த்தினார்
பின்னர் விருந்தினர்களுக்கு காளாஞ்சி உட்பட பிரசாதம் வழங்க பட்டதுடன் கலந்து கொண்ட மக்களுக்கும் பிரசாதம் வழங்க பட்டது
அதன் பின்னர் இளைஞர்கள் தமது பிரச்னைகளையும், மக்கள் தமது போக்குவரத்து, அடிப்படை தேவைகள், சுகாதாரவசதிகள், குடி தண்ணீர் உட்பட்ட சகல பிரச்னைகளையும் வடமாகாணசபை சுகாதார, சுதேசிய வைத்தியத்துறை அமைச்சர் கௌரவ ப.சத்தியலிங்கம் அவர்களிடம் தெரிவித்தனர், அவற்றுக்கு மாகாணசபை மற்றும் வவுனியா உறுபினர்களுடனும் கதைத்து விரைவில்
தீர்வு காண்பதாக உறுதி அளித்தார்.
மாலை 6 மணியளவில் பொங்கல் விழா இனிதே நிறைவடைந்தது.