வடமராட்சி வானில் பறந்த கட்டடங்களும் வாகனங்களும் பொங்கல் தின பட்டத்திருவிழா!!(படங்கள்,வீடியோ)

670

வடமராட்சியில் ஒவ்வொரு தைப்பொங்கல் தினத்திலும் பட்டம் விடும் போட்டி தொன்றுதொட்டு நடைபெற்றுவருகிறது. தைப்பொங்கல் தினமான நேற்றும் வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் மாபெரும் பட்டம் விடும் போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியில் கண்ணைக் கவரும் வகையில் நூற்றுக்கு மேற்பட்ட பட்டங்கள் வானில் பறக்கவிடப்பட்டன.

இந்தப் பட்டம் விடும் போட்டியைக் காண்பதற்காக பெருமளவிலான் மக்கள் திரண்டிருந்தனர். நடுவர்களால் தெரிவுசெய்யப்பட்ட பட்டங்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.