இன்று காலை 8.30 மணி தொடக்கம் சுன்னாகம் மின் நிலையம் முன்பாக கழிவு எண்ணெய் பரவலால் பாதிக்கப்பட்ட மக்கள் நீதி கோரி ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
சுன்னாகம் தெல்லிப்பழை மல்லாகம் உடுவில் பிரதேச மக்களின் கிணறுகளில் சுன்னாகத்தில் அமைந்துள்ள அனல் மின் நிலையம் கழிவு எண்ணெயை நிலத்தின் கீழ் செலுத்தியமையால் கழிவு எண்ணெய் கலந்தது.
சுகாதாரப் பகுதியினர் இந்தக் கழிவு எண்ணெய் நீரைப் பயன்படுத்தினால் தோல் சம்பந்தமான நோய்கள் புற்றுநோய் மலட்டுத்தன்மை குறைபாடுடைய குழந்தைகள் பிறப்பதுடன் வேறு பல நோய்கள் ஏற்படும் என எச்சரித்தனர்.
இப்பிரச்சினைகள் குறித்து அரச உயர் அதிகாரிகளோ அரசியல்வாதிகளோ நடவடிக்கை எதுவும் எடுக்கவும் இல்லை.இதனைக் கண்டித்தும் இந்தப் பிரச்சினைகள் குறித்து உடனடிக் கவனம் எடுக்குமாறு கோரி மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன் வட மாகாண சபை உறுப்பினர்களான த.சித்தார்த்தன் பா.கஜதீபன், புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சியின் பொதுச்செயலாளர் சி.கா.செந்திவேல், இளைஞர் அணிச்செயலாளர் த.பிரகாஸ் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.








