வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வான மரதன் ஓட்டம் நேற்று (17.01) பாடசாலை அதிபர் தலைமமையில் நடைபெற்றது.
கோவில்குளம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் நிரோசன் அவர்களால் கோவில்குளம் இந்துக் கல்லூரியில் கொடியசைத்து ஆரம்பித்து வைக்கப்பட்ட இம் மரதன் ஓட்டம் மன்னார் வீதி வழியாக வைரவப்புளியங்குளத்தை அடைந்து அங்கிருந்து புகையிரத வீதி வழியாக மீண்டும் கோவில்குளம் இந்துக் கல்லூரியினை சென்றடைந்தது.
பெண்களுக்கான மரதன் ஓட்டமானது கண்டி வீதியிலுள்ள தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் ஆரம்பித்து கொரவப்பொத்தான வீதியூடாக கோவில்குளம் இந்துக் கல்லூரியினை சென்றடைந்தது.
இவ் மரதன் ஓட்டத்தில் ஆண்கள் பிரிவில் எஸ்.யூட் டினேஸ் முதலாம் இடத்தையும், பெண்கள் பிரிவில் எஸ்.தேவிகா முதலாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.









