மங்கள சமரவீர – இந்திய வெளிவிவகார அமைச்சர் இன்று சந்திப்பு!!

710

Mangala

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளது.

மங்கள சமரவீர புதிய வெளி்விவகார அமைச்சராக பதவியேற்ற பின்னர் இந்தியாவுக்கு வருகை தருமாறு விடுத்த அழைப்பை ஏற்று அவர் நேற்று இந்தியா புறப்பட்டுச் சென்றார்.

இந்தியா சென்ற வெளிவிவகார அமைச்சருக்கு புதுடெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்பளிக்கப்பட்டது.
மங்கள சமரவீர, இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளார்.