இடைக்கால வரவு – செலவுத் திட்டம் 29ம் திகதி பாராளுமன்றத்தில்!!

593

srilanka_parliament

புதிய ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை நியமிக்கப்பட்டதன் பின்னர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வாரத்தில் இரண்டு அமர்வுகள் நடைபெறவுள்ளதாகவும், நிலுவையில் உள்ள இரு மசோதாக்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதேவேளை 10 அத்தியவசியப் பொருட்களுக்கான விலை குறைக்கப்பட்ட புதிய இடைக்கால வரவு – செலவுத்திட்டமும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் எதிர்வரும் 29ம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.