வவுனியா மாவட்டத்தில் உழுந்து செய்கை மிக மோசமாக பாதிப்படைந்த நிலையில், தமக்கு நிவாரணங்களை பெற்றுத்தர விவசாய திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் உழுந்து செய்கை பிரதான சிறுதானிய செய்கையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில், கடந்த மாதம் பெய்த தொடர்ச்சியான மழையின் காரணமாக உழுந்து செய்கை முற்றாக பாதிப்படைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
வெள்ளம் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து இருந்தமையால், சிறந்த பராமரிப்பின்றி உழுந்து செய்கை பெரும் பாதிப்பை எதிர்க்கொண்டுள்ளது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உரிய நிவாரணங்களை பெற்றுத்தர விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.