முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்தியாவை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்த அவுஸ்திரேலிய அணி!!

431

Aus

முத்தரப்பு ஒருநாள் தொடரின் லீக் போட்டியில் அவுஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

அவுஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு தொடர் அவுஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. மெல்போர்னில் இ்னறு நடந்த லீக் போட்டியில் இந்தியா, அவுஸ்திரேலியா அணிகள் மோதின.

இந்திய அணியில் காயத்தால் அவதிப்படும் இஷாந்த் சர்மா நீக்கப்பட்டு, சுழல் பந்துவீச்சாளர் அக்சர் படேல் இடம்பிடித்தார். அவுஸ்திரேலிய அணியில் வேகப்பந்துவீச்சாளர் குரிந்தர் சாந்து அறிமுக வாய்ப்பு பெற்றார்.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணித்தலைவர் டோனி துடுப்பெடுத்தாட முடிவு செய்தார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 267 ஓட்டங்கள் எடுத்தது.

இந்திய அணி சார்பாக ரோஹித் ஷர்மா 138 ஓட்டங்களையும் சுரேஷ் ரைனா 51 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

அவுஸ்திரேலிய அணி சார்பாக அபாரமாக பந்து வீசிய மிட்சல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

வெற்றிக்கு 268 ஓட்டங்கள் தேவை என்ற இலக்குடன் அவுஸ்திரேலிய அணி களமிறங்கியது.

ஒரு ஓவர் மீதமுள்ள நிலையில் 6 விக்கெட்டுகளை இழந்து 269 ஓட்டங்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அவுஸ்திரேலியா அணி சார்பாக பிஞ்ச 98 ஓட்டங்களையும் ஸ்மித் 47 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியா சார்பில், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார், அஸ்வின், முகமது ஷமி, அக்சர் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

6 விக்கெட்டை வீழ்த்திய அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.