மணிப்பூர் மாநிலத்தில் 77வயது காங்கிரஸ் அமைச்சர் ஒருவர் 24 வயது பெண்ணை திருமணம் முடித்துள்ளார்.
மணிப்பூரில் முதலமைச்சர் ஓக்ரம் இபோபி சிங் தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக இருப்பவர் புங்ஜதாங் டோன் சிங் (77). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. 5 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 2011ம் ஆண்டு அமைச்சரின் மனைவி நோய் வாய்ப்பட்டு இறந்து விட்டார். குழந்தைகளுக்கு திருமணமாகி தனித்தனியாக சென்று விட்டனர். 3 வருட மாக புங்ஜதாங் தனியாக வாழ்ந்து வந்தார்.
அமைச்சராக இருந்தாலும் அவரது சொந்த வாழ்க்கையை கவனிக்க பெண் துணை தேவைப்பட்டது. இதையடுத்து தனது சொந்த ஊரான சுரசந்பூரைச் சேர்ந்த தாதியர் படிப்பை படித்து முடித்த 24 வயது இளம் பெண் திருமணம் முடித்து வைக்க இரு குடும்பத்தினரும் பேசி முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று முன் தினம் சொந்த ஊரில் இவர்களது திருமணம் நடந்தது. திருமண விழாவில் முதலமைச்சர் ஓக்ராம் மற்றும் அனைத்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், உயர் அதிகாரிகள், உறவினர்கள் கலந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.






