13 லட்சம் பெறுமதி தங்கம் கடத்திய இரு பெண்கள் இந்தியாவில் கைது!!

487

Gold

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்திச் சென்ற இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொச்சி விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து 13 லட்சம் பெறுமதியான 400 கிராம் தங்கம் மீட்கப்பட்டுள்ளது. ஆடைகளுக்குள் மறைத்து குறித்த பெண்கள் தங்கம் கடத்திச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.