வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்கான 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி!!

617

Kulavi

வவுனியா, புதுக்குளம் மகாவித்தியாலயத்தில் இன்று(19.01) காலை குளவி கொட்டியதில் பாதிப்படைந்த 7 பேர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது..

வவுனியா, புதுக்குளம் மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டிக்கு மாணவர்களை தயார்படுத்தும் நோக்கில் மைதானத்தில் விளையாட்டு பயிற்சிகள் இடம்பெற்றது. இதன்போது பாண்ட் வாத்திய அணிவகுப்பு பயிற்சியும் இடம்பெற்றுள்ளது. பாண்ட் வாத்திய அதிர்வால் பாடசாலை மைதானத்தின் அருகில் உள்ள கட்டடத்தின் கூரையில் இருந்த குளவிகள் பறந்து வந்து ஆசிரியர்களையும் மாணவர்களையும் தாக்கியுள்ளன.

இதன் காரணமாக நான்கு ஆசிரியர்களும் மூன்று மாணவர்களும் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளனர்.