வெள்ளவத்தையில் 22வது மாடியில் இருந்து விழுந்த சிறுமி பலி!!

588

heavalock

வௌ்ளவத்தை – ஹெவலொக்சிட்டி அடுக்குமாடிக் குடியிருப்பின் 22வது மாடியில் இருந்து விழுந்து நான்கு வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று மாலை நடைபெற்றுள்ளது.

இதனையடுத்து அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது மரணமடைந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சடலம் தற்போது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.