இணையம் (Internet) இல்லாமல் வட்ஸ்அப் : அறிமுகமாகின்றது புதிய சிம்!!

312

Whatsapp

தற்போது உள்ள காலகட்டத்தில் தகவல் தொடர்பில் வட்ஸ்-அப்பின் பங்கு முக்கியமாக இருக்கிறது. ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரித்து வரும் அதே நிலையில், வட்ஸ்-அப்பை பயன்பாடும் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. வட்ஸ்- அப் இல்லாத ஸ்மார்போன் இல்லை எனலாம்.

இதை பயன்படுத்துவதற்கு இணையம் முக்கியமாக தேவைப்படுகிறது. ஆனால் சில சமயங்களில் இணையம் இல்லாமல், இதை பயன்படுத்த முடிந்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்ற கேள்வி அனைவருக்கும் வந்திருக்கும்.

அதன்படி உலகம் முழுவதும் பிரபலமான இந்த வட்ஸ்-அப்பை இணையம் இல்லாமலேயே பயன்படுத்தும் வகையில் புதிய சிம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை இத்தாலியை சேர்ந்த ஒரு மொபைல் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இந்த அபூர்வ சிம்மை ‘ஜீரோமொபைல்’ நிறுவனத்தின் இயக்குனர் மானுவேல் ஜனிலியா கண்டுபிடித்திருக்கிறார்.

இந்த சிம்மை பயன்படுத்தி வை-ஃபை, டேட்டா கனெக்ஷன், ரோமிங் இல்லாமல் மெசேஜை அனுப்பலாம். இந்த சிம்மிற்கு ‘வட்ஸிம்’ என பெயரிடப்பட்டுள்ளது.

‘வட்ஸிம்’ உலகம் முழுவதிலுமுள்ள 150 நாடுகளில் 400க்கும் மேற்பட்ட மொபைல் சேவையாளர்களுடன் இணைந்து சேவையை வழங்குகிறது.

இதில் ஒருவேளை அருகில் ஏதாவது ஒரு நெட்வேக்கில் ‘சிக்னல்’ நன்றாக இருந்தால் தானாகவே அந்த நெட்வேக்கில் ‘கனெக்ட்’ ஆகிவிடும். இந்த சிம் அதிகம் பயணம் செய்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.

அதைவிட, அவர்கள் தங்களுக்கு அன்பானவர்களுடன் எந்த தடையும் இல்லாமல் ‘வட்ஸ்-அப்பில் எப்போதும் இணைந்திருக்க முடியும். இதற்கு எந்த ரோமிங் கட்டணங்களும் கிடையாது என்பது கூடுதல் வசதி.

இந்த சிம்மின் விலை வெளிநாட்டு பண மதிப்பில் 10 பவுண்டுகள் செலவாகும். வட்ஸிம்முக்கு மாதாந்திர கட்டணங்களோ, பிக்ஸட் கட்டணங்களோ, எதுவும் கிடையாது. அதுமட்டுமல்ல இது ஒருபோதும் காலாவதி ஆகவே ஆகாது.

மெசேஜை போல மல்டிமீடியா கண்டென்ட்டுகளான போட்டோ, வீடியோ, ஓடியோ பைல்களை இலவசமாக இதில் அனுப்ப முடியாது.

அதற்கு தனியாக நாம் ரீசார்ஜ் செய்துதான் ஆக வேண்டும். எனினும், சில கிரெடிட் பொயிண்டுகளை கலெக்ட் செய்து கொண்டால் அதற்கு ஏற்றவாறு இலவசமாக அனுப்ப முடியும்.

அதே சமயம் கன்டக்ட் மற்றும் லொகேஷன் ஷேரிங் செய்வதற்கு எந்த கட்டணமும் இல்லை. அதற்கு எந்தவித கிரெடிட்டுகளும் தேவையில்லை என்பது சிறந்த சேவையாக உள்ளது.