முதன்முறையாக குழந்தையை ரசிக்கும் பார்வையற்ற தாய் : நெஞ்சை நெகிழச் செய்யும் ஓர் சம்பவம்!!(வீடியோ)

272

Baby

கனடாவில் பார்வையற்ற பெண் ஒருவர் தனது முதல் குழந்தையை சிறப்பு கண்ணாடி மூலம் முதன்முறையாக பார்த்து வியந்தது அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.

அமெரிக்காவின் கனடாவில் வசித்து வருபவர் கேத்தி பீட்ஸ் (29). இவர் ஸ்டார்கர்ட் என்றழைக்கப்படும் மரபணுக் குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டதால் இவருக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த வருடம் கர்ப்பமான இவர் எல்லா பெண்களையும் போலவே தனக்கு பிறக்கப் போகும் குழந்தை எப்படி இருக்கும் என்ற கற்பனையில் மிதந்து வந்தார்.

ஆனால், பிரசவ திகதி நெருங்கும் போது பார்வையற்ற தன்னால் தன் குழந்தையை எப்படிப் பார்க்க முடியும் என்று கேத்தி ஏங்கினார்.

குழந்தையை பார்க்க ஏங்கிய கேத்திக்கு சிறப்புக் கண்ணாடி மூலம் தன் முதல் குழந்தையைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது முதன்முறையாக குழந்தையைப் பார்த்த அவர் எல்லையில்லா மகிழ்ச்சியடைந்தார்.

கேத்தியின் இந்த சந்தோஷமான அனுபவத்தை காணொளியாக பதிவு செய்து யூ டியூபிலும் பதிவேற்றியுள்ளனர். கேத்தி தன் குழந்தையைப் பார்த்து அதிசயிக்கும் காட்சி காண்பவரை நெகிழச் செய்துள்ளது.

தன் குழந்தையின் ஒவ்வொரு அசைவுகளையும் கேத்தி இந்த புதிய தொழில்நுட்ப சாதனம் மூலம் நேரடியாகக் கண்டு களித்து மகிழ்ச்சியில் மூழ்கினார்.

அந்த காணொளியில், நான் பார்க்கும் முதல் குழந்தை எனது குழந்தை தான். இது என்னை சந்தோஷத்தில் மூழ்கடித்துள்ளது என்று கேத்தி கூறியுள்ளார்.