வவுனியா சிவன் முதியோர் இல்லத்து பார்வையற்ற பாடும் திறமை கொண்ட கலைஞர்!!(படங்கள்,வீடியோ)

861

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் அறங்காவலர் சபையின் கீழ் பராமரிக்கபடும் வவுனியா எல்லப்பர் மருதங்குளத்தில் அமைந்துள்ள சிவன் முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர்களை மிருதங்கம் வாசித்தபடி தன் பாட்டின்மூலம் அவர்களின் துன்பதுயரங்களை மறக்க செய்யும் பணியையும்தன் வயதுமுதிர்ந்த தாயையும் பராமரித்தபடி பாடுகின்ற இந்த கண்பார்வையற்ற கலைஞனது பாட்டுக்கு ஒரு LIKE பண்ணுங்க அத்தோடு நின்றுவிடாமல் SHARE பண்ணி அனைவருக்கும் சிவன் முதியோர் இல்லம் தொடர்பாக தெரியபடுத்துங்கள் …

இந்த கலைஞர் கடந்த 2009 ஆம் ஆண்டு வன்னி இடப்பெயர்வின் போது தனது வயது முதிர்ந்த தாயுடன் இணைந்து சிவன் முதியோர் இல்லத்தில் தஞ்சமடைந்தமை குறிப்பிடத்தக்கது . சிவன் மதியோர் இல்லத்தில் தங்கியிருக்கும் இந்த கண்பார்வையற்ற கலைஞர் மிருதங்கம் வாசித்தபடி பாடல் பாடும் அழகே தனி தான் .இவரது பாட்டில் தங்களது துன்பதுயரங்கள் மறந்து போய் ரசித்தபடி பல முதியவர்களும் அன்று சிவன் முதியோர் இல்லத்து புதிய கட்டிடத்திறப்பு விழாவுக்கு வருகைதந்த பிரமுகர்கள் அனைவரது கண்களிலும் நீர் வரும் அளவுக்கு தன்னை மறந்து பாடியதை காணக்கூடியதாய் இருந்தது .

(மேற்படி வீடியோ நேற்றைய 21/01/2015 அன்று சிவன் முதியோர் இல்ல புதிய கட்டிட திறப்புவிழாவின் போது எடுக்கபட்டதாகும் .)


DSC_0142 DSC_0143 DSC_0145