முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் கடவுச்சீட்டு முடக்கம் : வெளிநாடு செல்லத் தடை!!

967

Aluth

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவின் கடவுச்சீட்டு மூன்று மாத காலத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

அவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் முடியும் வரை வெளிநாடு செல்ல முடியாதபடி அவரது கடவுச்சீட்டு இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடி விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர், இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன ஆகியோர் வெளிநாடு செல்ல தடைவிதிக்கப்பட்டது.